அவள் பெயர் லட்சுமி
பெயருக்கு ஏற்ப லட்சணமானவள்
இதற்கு முன்
அவள் உடல் என்னில் பட்டதில்லை
அவளை நானும் தொட்டதில்லை
அன்று இன்னும் விடியவில்லை
கொல்லைப்பக்கமாக மா மரத்தடியில்
தனிமையில் முதன் முறையாக
அவளை சந்தித்தேன்
கிட்ட நெருங்கினேன்
அவள் எட்ட போனாள்
விட்டேனா நான்?
தொட்டேன் முதுகில் மெதுவாக
அவள் நாணத்தால் தலை குனிந்தால்
கன்னத்தில் தொடக்கி
கழுத்து வரை கையால் வருடினேன்
கடைக்கண்ணால் என்னை அவள்
எடைபோட்டால்
இவ்வளவு போதாதா எனக்கு?
நான் புதியவன் - என்னுடன்
பிணங்குவாள் என்று பயந்தேன்
இணங்கிவிட்டாலே - விரைவாக
ஆசையை அடக்க முடியவில்லை
கழுத்திலிருந்து கையை எடுத்து
பெருத்த அவள் தனத்தை தடவினேன்
கூச்சத்துடன் மயிர் சிலிர்த்தாள்
எனக்கு தைரியம் வந்துவிட்டது
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல்
மூன்று விரல்களினாலும் ,அவளது
முலைக்காம்பை வருடினேன்
அவள் அசையவில்லை
இசைந்துவிட்டாள்
எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி
இன்ப உணர்ச்சி இதயத்தில் பொங்க
வந்த வேலையை தொடங்கினேன்
அவளது நான்கு முலைகளிலும் மாறி மாறி
நான்கு லிட்டர் பால் கறந்தேன்
நன்றி லட்சுமி
காலைக்கூட கட்டவில்லை - நீயோ
வாலைக்கூட ஆட்டாமல்
அசையாமல் ஒத்துழைத்தாய்
பாதிப்பாலை நான் கறந்தேன்
மீதிப்பாலை கன்றுக்கு கொடு
மீண்டும் நாளை சிந்திப்போம்.
பெயருக்கு ஏற்ப லட்சணமானவள்
இதற்கு முன்
அவள் உடல் என்னில் பட்டதில்லை
அவளை நானும் தொட்டதில்லை
அன்று இன்னும் விடியவில்லை
கொல்லைப்பக்கமாக மா மரத்தடியில்
தனிமையில் முதன் முறையாக
அவளை சந்தித்தேன்
கிட்ட நெருங்கினேன்
அவள் எட்ட போனாள்
விட்டேனா நான்?
தொட்டேன் முதுகில் மெதுவாக
அவள் நாணத்தால் தலை குனிந்தால்
கன்னத்தில் தொடக்கி
கழுத்து வரை கையால் வருடினேன்
கடைக்கண்ணால் என்னை அவள்
எடைபோட்டால்
இவ்வளவு போதாதா எனக்கு?
நான் புதியவன் - என்னுடன்
பிணங்குவாள் என்று பயந்தேன்
இணங்கிவிட்டாலே - விரைவாக
ஆசையை அடக்க முடியவில்லை
கழுத்திலிருந்து கையை எடுத்து
பெருத்த அவள் தனத்தை தடவினேன்
கூச்சத்துடன் மயிர் சிலிர்த்தாள்
எனக்கு தைரியம் வந்துவிட்டது
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல்
மூன்று விரல்களினாலும் ,அவளது
முலைக்காம்பை வருடினேன்
அவள் அசையவில்லை
இசைந்துவிட்டாள்
எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி
இன்ப உணர்ச்சி இதயத்தில் பொங்க
வந்த வேலையை தொடங்கினேன்
அவளது நான்கு முலைகளிலும் மாறி மாறி
நான்கு லிட்டர் பால் கறந்தேன்
நன்றி லட்சுமி
காலைக்கூட கட்டவில்லை - நீயோ
வாலைக்கூட ஆட்டாமல்
அசையாமல் ஒத்துழைத்தாய்
பாதிப்பாலை நான் கறந்தேன்
மீதிப்பாலை கன்றுக்கு கொடு
மீண்டும் நாளை சிந்திப்போம்.
