வியாழன், 30 ஏப்ரல், 2015

பிரிவு...

ஒன்றரை வருட பிரிவின் வலி...
உன்னுடனான சந்திப்பிற்கு ஏங்குகிறது.
உன்னுடனான இனிமையான நினைவுகள்
என்னை வாட்டி வதைக்கின்றது.
யாரோ சொன்ன ஞாபகம் 
பிரிவின் வலி சுகமானது - என்று
பச்சைப் பொய்
அது - அதன் வலியை அறியாதவன் சொன்னது.





உன்னுடைய மௌனத்தில்தான்
தெரிந்துகொண்டேன் - அந்த
மொழியின் வீரியத்தை
உன்னுடனான பிரிவில்தான்
அறிந்துகொண்டேன் தனிமையின்
வலி எவ்வளவு கொடியது என்று.


நான் சுவாசிக்கும் ஒவ்வொரு கணமும்
என் அனுமதி இன்றியே
உன்னைக் கொண்டாடுகிறது என்
இதயம்.!

முடிவு செய்துவிட்டேன்...
இனி உன்னைப் பிரியவே கூடாது
இல்லையென்றால்!
உன்னை சந்திக்கவே கூடாது - என்று.


திருத்தல்.....!!


சிரை கொண்டு உருவான என் இதயம்..
உன்னிடத்தில் சிறை இருந்த போது..
அங்குரமற்றவனைப் போல்
அரவனைப்புக்கூடின்றி இருந்தேன்..
என் வாழ்வில் பல தட்டழிவுகளை கடந்துவிட்டேன்..
திரிசந்தி முழுவதும் உன் நினைவில் புரண்ட நாட்கள்...
மறந்தே போய்விட்டன.
இனி என் போகுகாலம் முழுவதும்...
பொன்னாய் மின்னட்டும்.