நடுவர் (வானவர்): இன்று ஓர் வித்தியாசமான பட்டிமன்றத்தைப் பார்த்து கேட்டு ரசிக்கப் போகிறீர்கள்.விலங்கினமா ? மனித இனமா? எது சிறந்த இனம் என்பதே இன்றைய தலைப்பு.
விலங்கினத்தின் சார்பில் வாதாட நாய்,எறும்பு,புறா,டால்பின் ஆகியோர் வந்துள்ளனர். மனித இனத்தின் சார்பில் வாதாட வக்கீல்,யோகி,போகி,ரோகி ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.
வக்கீல்: இறைவன் தாது வர்க்கம், தாவர வர்க்கம், ஜீவவர்க்கம், முதலான சிருஷ்டிகளை இவ்வுலகில் படைத்துள்ளான். அவைகளில் ஜீவ வர்க்கமே உயர்ந்தது. அந்த ஜீவ வர்க்கம் அனைத்திலும் மனித வர்க்கம் அதி சிறந்தது என்பது மண்ணும் விண்ணும் ஒத்துக்கொண்ட உண்மை.இதை பட்டிமன்றம் போட்டு விவாதித்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்ற எந்த சிருஷ்டியிடமும் காணப்படாத சிறப்பம்சம் மனிதனிடம் மட்டும்தான் உண்டு.அதுவே பகுத்தறிவு. பகுத்தறிவற்ற மிருகங்களுக்கு இது எங்கே புரிய போகின்றது. நன்றி, வணக்கம்.
நாய்: கணம் நடுவர் அவர்களே! வக்கீல் நன்றாக பேசுகிறார்.பேச்சில் பிறந்து பேச்சிலே வளர்ந்து பேச்சையே தொழிலாக கொண்ட மனிதனுக்கு பேச சொல்லிக்கொடுக்கவா வேண்டும்.?
பகுத்தறிவை தூகிபிடித்துக்கொண்டு தம்மினமே சிறந்த இனம் என்று தம்பட்டம் அடிக்கும் வக்கீல் சார் அவர்களே!உங்களது பகுத்தறிவிற்கு எட்டாத பல விசயங்கள் எமது ஐயரிவிற்கு எட்டுகிறதே!
திருடனைப் பிடிக்க நமது சகோதர நாய்களை இழுத்துக் கொண்டு நாயாய் அழைகிரீர்களே!
உங்களது போலீஸ் இலாகவினதும் சுங்க வரித் திணைக்களத்தினதும் கண்ணில் மண்ணை தூவி விட்டு போதை வஸ்த்து சர்வதேச மட்டத்தில் கடத்தப்படுகிறதே!எமது மோப்பம் பிடிக்கும் நாய் நண்பர்களின் உதவி இல்லை என்றால் இதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
மழைக்காலம் எப்போது வரும்? என்ற ஞானம் உங்களின் அவதான நிலையம் முன்னறிவிப்பு செய்வதற்கு முன்னரே எங்கள் எறும்புகளுக்கு அது தெரியும்!
மனித இனத்தில் நல்லவன் யார்? கெட்டவன் யார்? என்பதை அவனைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டத்தை வைத்து நாம் அறிந்து கொள்கிறோம். உங்களால் இது முடியாதே! இப்படி என்னால் அடுக்கிக்கொண்டே போக முடியும். பகுத்தறிவாம் பகுத்தறிவு! பெரிசாக பேச வந்துவிட்டார்கள்.
வக்கீல்:சப்தம் போட்டு குறைத்தால் பொய்யை மெய்யாக்கி விட முடியும் என்று நாயார் நினைக்கிறார் போலும். சக்தி வாய்ந்த யானை முதல் விஷம் கக்கும் பாம்பு வரை நீங்கள் அனைவரும் எமக்குக் குற்றேவல் செய்யும் அடிமைகள். ஏன் விலங்கினங்களின் வனராஜா சிங்கம் கூட எமது பகுத்தறிவுக்கு கட்டுப்பட்டு இரு! என்றால் இருக்கிறார்.எழு என்றால் எழும்புகிறார். இப்போது புரிகிறதா எந்த இனம் மேம்பட்ட இனம் என்று....
நாய்: கனம் நடுவர் அவர்களே!வாத விவாதங்களை நீட்டிக் கொண்டு போவதில் அர்த்தமில்லை. நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மனிதன் சரியாக பதிலளித்தால் நாம் எமது தோல்வியை ஒத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
மனித இனத்தில் ஒருவன் உழைப்பில் பலர் உயிர் வாழும் விந்தையை பார்க்கிறோம்.உழைக்கும் கரங்கள் இரண்டு உண்டு களிக்கும் வாய்களோ பத்துப் பதினைந்து.நாம் மிருகங்கள் ஒவ்வொருவரும் எமது உணவைத் தேடிக் கொள்கிறோம். வேலை இல்லாமல் சோம்பேறியாக ஊர்சுற்றித்திரியும் ஊதாரி எவரையேனும் எங்கள் மத்தியில் காட்ட முடியுமா?
வக்கீல் ஐயா அவர்களே! நாம் எமது குழந்தைகளுக்கு சொந்த தாய்ப்பாலை தவிர வேறு எந்தப் பாலையும் கொடுப்பதில்லையே!
ஆனால் நீங்கள் எல்லா வகையிலும் போஷாக்கு நிறைந்த தாய்ப்பாலை ஒதுக்கிவிட்டு பசுப்பாலை கொடுப்பதில் இருந்து உங்களை விட நாம் மேலானவர்கள் என்பது புலணாகிறது.
எங்கள் மத்தியில் இனத்துவேஷமோ ஆதிக்க வெறியோ கிடையாது. சில்லறை பிரச்சனைகள் எழுந்தாலும் தலையினாலும் கொம்பினாலும் வாயினாலும் காலினாலும் அடித்துக் கொள்வோம், பின்பு சமாதானமாகி விடுவோம்.
ஆனால் நீங்களோ ஒவ்வொரு யுத்தத்திலும் எதிரியை அழிக்க புதிய யுக்திகளை கையாள்கிறீர்கள். அணு உயிரியல் ஆயுதங்களால் உங்கள் இனத்தை மட்டுமல்ல எண்கள் இனத்தயுமல்லவா அழிக்கிறீர்கள். இதுதான் பகுத்தறிவின் சாதனை.
கணம் நடுவர்களே! இன்று மனித இனம் போதை வஸ்துகளுக்கு அடிமை ஆகி உத்தமமான வாழ்வை பாழாக்கி தன்னைத்தனே நாசமாக்கிக் கொண்டிருக்கின்றது. நாம் விலங்குகள்தான் இருப்பினும் உடலையும் உள்ளத்தையும் ஏன் முழு வாழ்வையும் பாழாக்கும் போதை பொருள் பாவனை
எம்மிடம் கிடையவே கிடையாது. பகுத்தறிவுவாதிகளே! இதன் பயங்கர விளைவை நீங்கள் இன்னும் பகுத்தரியவில்லையா?
நாய், பன்றி,கழுதை,கிடா மாடு என்றெல்லாம் உங்களில் துஷ்ட குணம் படைத்தவர்களை திட்டுகிறீர்கள், ஆனால் எமது விலங்கினத்தில் யாருமே செய்யாத இழிவான செயலை நீங்கள் செய்கிறீர்கள். ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் கட்டிக்கொண்டு புரழுகிரீர்களே, தன்பால் புணர்ச்சி இது உங்கள் பகுத்தறிவின் புதிய கண்டுபிடிப்பா? சொல்லுங்கள் வக்கீல் சார்!
இறைவா! நீ எங்களுக்கு அருளிய ஐந்து அறிவே எமக்குப் போதுமானது எங்களுக்குப் பகுத்தறிவைத் தந்து அற்ப மனிதப் பதராக என்னை ஆக்கி விடாதே! நன்றி வணக்கம்.
நடுவர்:.........??????