வியாழன், 7 ஜூன், 2012

வெளிநாட்டு வாழ்க்கை


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்!

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல் happy new year ,happy festival என்று மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும் கையாலாகதவர்கள்!

இங்கே கண்ணே,,,கனியமுதே! என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை!
கணணி பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...
தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நங்கள்!

நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குரையிருந்தாலும் first class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்.

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும் முன் வாசனை திரவியம் வாங்க மறப்பதில்லை!
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க.

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் நாங்கள்! கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்!

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்!

திறைகடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்.
எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை...
உனக்கென்ன!
விமானப்பயணம்,வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது,,,,,

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்.
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்! இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது!

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!

இழப்பீடு கிடைக்காத இழப்பு இது...
நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது.....
யாருக்காக!!!
எதற்காக!!!!!!!!
ஏன்!!!!!!!!
தந்தையின் கடன்,
தங்கையின் திருமணம்,
தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு,
குழந்தையின் எதிர்காலம்,
குடும்பச்சுமை...........
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல கண் முன்னே.....

20 கருத்துகள்:

  1. வெளிநாட்டு வாழ்வை நிஜத்தோடு சொல்லும்  நிறைவான பதிவு சகோ!

    பதிலளிநீக்கு
  2. வெரிப்பிக்கேசன் வைப்பதால் பலர் பின்னூட்டம் போட முன்வரமாட்டார்கள் சகோ இது தாழ்மையான் என் கருத்து கொஞ்சம் சிந்திக்கவும்!

    பதிலளிநீக்கு
  3. முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  4. வெரிப்பிக்கேசன் வைப்பதால் பலர் பின்னூட்டம் போட முன்வரமாட்டார்கள் சகோ இது தாழ்மையான் என் கருத்து கொஞ்சம் சிந்திக்கவும்!//

    நண்பா நான் வலைக்கு மிகவும் புதிது அதனால் எனக்கு அதிகமாக தெரியாது இதனை பற்றி, இனிமேல்தான் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் ,
    உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பிளாக்கோட தலைப்பு போலவே கவிதையும் நெருப்பாக சுடுகிறது.

    அதிலும் ////கணணி பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது.../////

    ///வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும் முன் வாசனை திரவியம் வாங்க மறப்பதில்லை!
    எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க.////

    என்ற வரிகள் அருமை. தொடர்ந்து எழுதுங்கள் சந்திக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் வரிகள்...ரொம்ப யதார்த்தமா எழுதி இருக்கேங்க..நான் கூட வெளிநாட்டில் வேளைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்...உங்கள் வரிகள் என்னை ரொம்பவே சிந்திக்க வைக்கிறது...
    //நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!///
    இதில் நமது அடுத்த தலைமுறையினர் வாழ்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தனது வாலிபத்தை அடமானம் வைப்போர் நிறைய பேர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி ராஜ் உங்கள் கருத்திற்கு
      வெளிநாட்டில் இருக்கும் போது சந்தோசப்படும் ஒரே தருணம் வீட்டுக்கு பணம் அனுப்பும் போதுதான்
      பணம் அனுப்பியதும் அந்த மாதம் பட்ட கஷ்டம் அனைத்தும் ஒரு நொடியில் மறந்து போய்விடும்.

      நீக்கு
  7. இது தான் முதல் வருகை.இயல்பாய் உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்.பதிவுலகில் சாதிக்க இந்த சிறிய சகோதரியின் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ. வருகைக்கும் பின்னூட்டம் இட்டத்திற்கும்.

      நீக்கு
  8. //நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
    உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குரையிருந்தாலும் first class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்.//

    very true,, Good Post

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

      நீக்கு
  9. nanba ,

    ithu oru sila nadugalukku mattum porunthum endru nambugiren , US/Europe vanthu vittu ooruku thirumbum ennam 99% yaarukkum varuvathu illai.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பா.ஆனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு வரும் துறை படிக்காத தொழிலாளர்களில் முக்கால்வாசி பேரின் நிலைமை இதுதான் நண்பா.நான் கண்களால் கண்டது.

      நீக்கு
  10. Ungal Varigal Anaithum unmai.. Because i am also working in Abroad..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

      நீக்கு
  11. சொர்க்கமே என்றாலும் நம் ஊரப் போல வருமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது வெளிநாடு வந்த பிறகுதான் நிறைய பேர் உணர்கின்றனர் உண்மையை.

      நன்றி சகோ வருகைக்கு.

      நீக்கு